Main Menu

இராணுவப் பிரசன்னத்துக்கு மத்தியில் முள்ளி வாய்க்காலில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும் தனவந்தர் ஒருவரும் இணைந்து இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையுடன் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் பதினோராவது ஆண்டு நினைவுக் காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வரும் மே மாதம் முள்ளிவாய்க்காலில் நினைகூரல் இடம்பெறவுள்ளது.

இன்றைய சாந்திப் பிரார்த்தனையைத் தொடர்ந்து பிதிர்க்கடன் தீர்ப்பதற்காக மக்கள் மற்றும் குருமார்கள் அனைவரும் இணைந்து முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க் கடன்களைத் தீர்த்தனர். தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேவேளை, இந்தநிகழ்வு இடம்பெறும் இடத்துக்கு வருகைதந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர் நிகழ்வில் கலந்துகொண்ட மக்களின் வாகன இலக்கங்களைப் பதிவுசெய்ததோடு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியளாலரிடம் விசாரணை மேற்கொண்டு கடமைக்கு இடையூறு விளைவித்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...