Main Menu

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் – மஹிந்த

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் ,”கொவிட் தொற்று முதன் முதலாக வந்தபோது அதனை கட்டுப்படுத்த முடியுமானதாயிற்று. கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழு, அத்தியவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு, அரச துறை, சுகாதார துறை, இராணுவம் உள்ளிட்ட முப்படையினர், பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். விசேடமாக உளவுத்துறை மற்றும் சுகாதார துறை ஆகியன செய்த அர்ப்பணிப்பை இங்கு நிச்சயம் நினைவுகூற வேண்டும்.

இக்காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சந்தித்து வருகின்றனர், அது தொடர்பாக உங்களது இங்கு நிபுணர்கள் தெளிவுபடுத்துவர். நாங்கள் எப்போதும் மக்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்தவர்கள். அதனால் எதிர்காலத்தில் மக்களை பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேர்தல் காலம் என்பதால் கொரோனா இரண்டாவது அலை நிலவிவருகிறது என தேர்தல் மேடைகளில் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்கள் பீதியில் உள்ள நிலையில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தாது செயற்பட வேண்டியது எமது பொறுப்பாகும்.

பகிரவும்...