Main Menu

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் – ஸ்டாலின்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அவர், கொரோனா தொற்றை கையாளுவதில் அரசு தோல்விடையடைந்துவிட்டது என கூறினார்.

இறப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு இன்னமும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றும் கொரோனாவால் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் மாநிலத்தின் பொருளாதாரம் மோசமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவின் செயற்பாடு குறித்தும் சரியான தகவல்கள் இல்லை என ஸ்டாலின் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தியபோதும் அதற்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், கொரோனாவால் ஏற்பட்ட நிதி இழப்பு, செலவு உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசு சட்டப்பேரவையில் வைக்க வேண்டும் என்றும் மேலும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பகிரவும்...