Main Menu

கொரோனா அச்சம் – ரோபோ மூலம் உணவு விநியோகம்

கொரோனா தொற்று அச்சம் காரணமாக தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ரோபோக்கள் மூலம் உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலினில் இவ்வாறு ரோபோக்களின் உதவியுடன் உணவு விநியோகம் செய்யப்படுகின்றது.

உணவகங்களில் முன்பதிவு செய்யப்படும் உணவுகளை செம்மஞ்சல் கொடி கட்டப்பட்ட இந்த ரோபோக்கள் எடுத்துச் செல்கின்றன.

இதற்கான பணத்தை ஒன்லைன் ஊடாக கட்டியதும் உணவு விநியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் உணவு விநியோகம் செய்யப்பட்டதன் பின்னரும் ரோபோக்கள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகின்றன.

தினமும் 120 முறை உணவு விநியோகிக்கப்படுவதாக ரோபோக்களின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...