Main Menu

உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டது உக்ரைன் தலைநகர் கிவ்

உக்ரைன் தலைநகர் கிவ் என்ற இடமே உலகிலேயே அதிக மாசுபட்ட இடமாக கணிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்குச் சொந்தமான கைவிடப்பட்ட அணுமின் நிலையமான செர்னோபில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள புகை மூட்டம் காற்று மாசினை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது பற்றியுள்ள நெருப்பு மற்றும் புகை மூட்டம் காரணமாக புதிய கர்வீச்சு ஆபத்து எதுவும் இல்லை என உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இருப்பினும் கிவ் நகரத்தில் வசிக்கும் 3.7 மில்லியன் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த 1986ம் ஆண்டு செர்னோபில் அணுஉலையில் ஏற்பட்ட விபத்தினால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...