Main Menu

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் – மத்திய அரசு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பிப்பது அவசியம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஆரம்பமாகியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கேரளாவில் ஒருநாள் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தொற்று விகிதம் இருபதை கடந்துள்ளது.

இந்நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசு வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...