Main Menu

கொரோனாவின் இரண்டாவது அலை : 500 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து நிற்கும் அவலம்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து வாடுவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்ட தகவலுக்கு அமைய மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகள் அனைவரும் மாவட்ட அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தைகளின் நலனுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...