Main Menu

கொரோனாவினால் தனிமைப் படுத்தப்பட்ட மையமாகப் பயன் படுத்தப்பட்ட கட்டடம் இடிந்து வீழ்ந்தது – 4 பேர் உயிரிழப்பு!

தென்கிழக்கு சீன துறைமுக நகரமான குவான்ஜோவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின்போது சுமார் 70 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 5 மாடிகள் கொண்ட கட்டடமே இடிந்து வீழ்ந்ததாகவும் இந்நிலையில் இன்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 47 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் தற்போது மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளிகளில் காணமுடிகின்றது.

இருப்பினும் கட்டடம் இடிந்து வீழ்ந்தமைக்கான காரணம் தொடர்பாக எவ்வித தகவல்களும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...