Main Menu

வீரப் பெண்மணிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் – கமல்ஹாசன்

பெண்களுக்கு பாதுகாப்பும் சம உரிமையும் என்ற முழக்கத்தோடு ஆண்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் “பெண்களுக்கு பாதுகாப்பும் சம உரிமையும் என்ற முழக்கத்தோடு, பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும் ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி,  சம உரிமை என்பது சாத்தியப்படும். தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...