Main Menu

கேனரி தீவுகளில் 7,000 புலம் பெயர்ந்தோருக்கு அவசரகால தங்குமிடம்: குடிவரவு அமைச்சர் எஸ்கிரிவா

சமீபத்தில் வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு தங்குமிடம் வழங்க ஸ்பெயினின் கேனரி தீவுகளில் அவசர முகாம்கள் அமைக்கப்படவுள்ளது.

7,000 புலம்பெயர்ந்தோருக்கான தற்காலிக தங்குமிடம் எதிர்வரும் வாரங்களுக்குள் தயாராக இருக்கும் என்று குடிவரவு அமைச்சர் ஜோஸ் லூயிஸ் எஸ்கிரிவா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 18,000க்கும் மேற்பட்ட மக்கள், தீவுகளுக்கு வந்துள்ளனர். இது 2019இல் காணப்பட்ட எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகையை செயலாக்குவதற்கும் வைரஸ் சோதனைகளை நடத்துவதற்கும் அமைக்கப்பட்ட கிரான் கனேரியாவின் ஆர்குயின்குயின் துறைமுகத்தில், இருந்து தலைநகர் லாஸ் பால்மாஸுக்கு அருகிலுள்ள ஒரு தற்காலிக முகாமுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் மாற்றப்பட்டிருந்தாலும், புதிய வருகையால் அது அதிகமாக உள்ளது.

கனேரியாவின் ஆர்குயின்குயின் துறைமுகத்தில், சுமார் 2,000பேர் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...