Main Menu

குழுமோதல் – லிசே வாயிலில் மாணவன் தலையில் சுத்தியலால் தாக்குதல் – கோமாவில் மாணவன்

நேற்று வெள்ளிக்கிழமை, Saint-Michel-sur-Orge  இல் இருக்கும் Léonard-de-Vinci லிசேயின் வாயிலில் மிகக் கொடூரமான வன்முறை நடந்தேறி உள்ளது.

லிசே மாணவர்களிற்கு இடையெ நடந்த குழு மோதலில், 15 வயதுடைய சிறுவன் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு, தலை பிளந்த நிலையில், அவசரசகிச்சைப் படையினரால் மீட்கப்பட்டு, உடனடியாக நெக்கர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சத்திரசிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். செயற்கை கோமா நிலையில் Dramane எனும் இந்தப் பதினைந்து வயது மாணவன் வைக்கப்பட்டுள்ளான். ஆபத்தான நிலையயை இன்னமும் இந்த மாணவன் தாண்டவில்லை.

«காவற்துறையும் அரசாங்கமும் இன்னமும் என்ன நிகழவேண்டும் எனக் காத்திருக்கின்றார்கள். இது 21ம் நூற்றாண்டு. ஆனாலும் இன்னமும் பாடசாலைகளின் முன்னால் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள். அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தெரியும். ஆனாலும் எந்த மாற்றமும் இல்லாமல் வன்முறை தொடர்கின்றது» என தனது மகனின் மீதான தாக்குதலிற்கு நியாயம் கோரி தந்தையின் குரல் மிகவும் கோபத்தடன் இன்று ஒலித்துள்ளது.

இந்த மாணவன் இரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, சகமாணவர்கள் உடனடியான ஒரு வெள்ளைத் துணியால் தலையைக் கட்டி முதலுதவி செய்துள்ளனர். அனால் இந்த மாணவனைத் தாக்கியவர்கள் முகக்கவசத்தால் முகத்தை மறைத்தபடி தப்பி ஓடி உள்ளனர்.

பகிரவும்...