Main Menu

குழந்தை சுர்ஜித்தை மீட்க நான்காவது நாளாக நீடிக்கும் மீட்பு பணிகள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும்பணி நான்காவது நாளாக நீடிக்கும் நிலையில், குழந்தை இருக்கும் இடத்தை நெருங்க இன்னும் நீண்ட நேரம் ஆகும் என தெரிகிறது.

ஆழ்துளை கிணற்றின் அருகே பெரிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிதிருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை. 

இதையடுத்து ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய ஆழ்துளை கிணறு தோண்டி, குழந்தை இருக்கும் இடத்தை நெருங்கியதும், பக்கவாட்டில் சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டது. ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. ஆனால், கடினமாக பாறைப்பகுதியாக இருப்பதால், குழி தோண்டுவது சவாலாக உள்ளது.
நான்காவது நாளாக இன்று மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. ஆழ்துளை கிணற்றில் குழந்தை தற்போது 88 அடியில் இருக்கிறது. குழந்தை தொடர்ந்து கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
அந்த ஆழ்துளை கிணற்றின் அருகே ரிக் இயந்திரம் மூலம் 40 அடி வரை குழி தோண்டப்பட்டுள்ளது. 98 அடி வரை குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியை முடிக்க கிட்டத்தட்ட 12 மணி நேரம்வரை ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, குழந்தை சிக்கியிருக்கும் இடத்தை நெருங்க இன்னும் நீண்ட நேரம் ஆகலாம். 

பகிரவும்...