Main Menu

குழந்தைகள் மீதான வன்முறைக்கு தீவிரவாதமே காரணம் – ஐ.நாவில் இந்தியா வலியுறுத்து!

உலகம் முழுவதும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தீவிரவாதமே காரணமாக இருப்பதாக இந்தியா ஐ.நா மாநாட்டில் தெரிவித்துள்ளது.

ஆகவே உலக நாடுகள் குழந்தைகளை பாதுகாக்க தீவிரவாதத்தை உறுதியுடன் எதிர்க்க வேண்டும் எனவும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகள் மற்றும் ஆயுதப் போராட்டங்கள் என்ற தலைப்பில் ஐ.நாவில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியா மேற்படி குறிப்பிட்டுள்ளது.

தீவிரவாதத்தை தூண்டுவோர், அதற்கு நிதியுதவி அளிப்போர், தீவிரவாதத்திற்கு துணை நிற்போரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் விடுத்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தால் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் கல்வியைக் கற்க முடியாத சூழல் நிலவுவதாகவும்,  குழந்தைகளின் கல்வி உரிமையை முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்டுத்த பிற்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தின்போது குழந்தைகள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாகவும், சட்டவிரோத திருமணங்கள் அதிகரித்திருந்ததாகவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...