Main Menu

எதிர்கால திட்டங்களை வடிவமைத்து கோப்பு வடிவில் வைத்திருப்பதில் எந்த விதமான அர்த்தமும் இல்லை – ஜனாதிபதி

எதிர்கால திட்டங்களை வடிவமைத்து கோப்பு வடிவில் வைத்திருப்பதில் எந்தவிதமான அர்த்தமும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வடிவமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் அவற்றை செயற்படுத்துவதே இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, ஆண்டுதோறும் செலவிடப்படக்கூடிய தொகை மதிப்பிடப்பட வேண்டுமெனவும் ஜானாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமது தேர்தல் வாக்குறுதிகளை கருத்தில் கொண்டு, தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

மேலும், கல்வி, விவசாயம், தொழில்நுட்பம், வீடமைப்பு, நீர் வழங்கள், நகரப்புற மேம்பாடு மற்றும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த துறைகளில் எதிர்காலத்தில் எழும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக மாதம் ஒரு முறை இராஜாங்க அமைச்சர்களை சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

பகிரவும்...