Main Menu

குழந்தைகளை வேலைக்கு சேர்த்தால் 3 ஆண்டு சிறை தண்டனை – நீதிபதி எச்சரிக்கை

குழந்தைகளை வேலைக்கு சேர்த்தால் குறைந்த பட்சம் ஆறு மாதம் முதல் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபது தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

குழந்தை மற்றும் வளர் இளம் பருவத்தினர் 14 வயது நிரம்பாத சிறுவர்கள், 18 வயது நிரம்பாத வளர் இளம்பருவத்தினரை வேலைக்கு அமர்த்தவோ, அனுமதிக்கவோ கூடாது.

அப்படி அமர்த்தினால் அவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும், 20 முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

குழந்தைகளை பீடி சுற்று தல், தீப்பெட்டி தயாரித்தல், பட்டாசு, வெடி மருந்துகள் தயாரித்தல், கட்டுமான தொழில், நெசவு தொழில், செங்கல் காளவாசல், உணவு விடுதிகள், தோல் பதனிடுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. அப்படி ஈடுபடுத்தினால் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள், என்றார்.

சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் ராமலிங்கம், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ராமகிருஷ்ணன், தலைமை குற்றவியல் நீதிபதி சிவப்பிரகாசம், மாஜிஸ் திரேட் ராதாகிருஷ்ணன், வக்கீல்கள் சங்கத்தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி உள்பட நிர்வாகிகள், நீதிமன்ற அலுவலர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம், அரண்மனை, பஸ் ஸ்டாண்ட் உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை சட்டப் பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் எப்.பிளோமி, லோகநாதன் செய்திருந்தனர்.

பகிரவும்...