Main Menu

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின் தடை ஏற்படும் சமயங்களில் கணினி மயமாக்கல் மூலம் மின் தடையை நீக்கும் கருவியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் அவர் பேசும் போது, மின் தடை ஏற்படும் சமயங்களில் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடர்பு கொண்டு எந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் தெரிவித்தால் அந்த விபரம் கணினியில் பதிவு செய்து கொள்ளப்படும்.

பின்னர் சம்மந்தப்பட்ட இடத்துக்கு மின் வாரிய ஊழியர்கள் வந்து அதனை சரி செய்வார்கள் என்று தெரிவித்தார். அதன் பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. முதற்கட்டமாக குடிமராமத்து பணி செய்ய ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் குடிநீர் தட்டுப்பாடு நிலவரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளோம்.

அதன் அடிப்படையில் எந்தெந்த மாவட்டத்துக்கு முன்னுரிமை அளித்து எவ்வளவு தொகை ஒதுக்கப்படும் என ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி குடிநீர் தட்டுப்பாடு சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பகிரவும்...