Day: June 15, 2019
வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ராஜினாமா
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரும், ஜனாதிபதி டிரம்பின் நம்பிக்கைக்குரிய ஆதரவாளருமான சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த தகவலை டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளராக இருப்பவர் சாரா சாண்டர்ஸ். மிக கவுரவமிக்கமேலும் படிக்க...
லிபியா உள்நாட்டு போர் – இருதரப்பு மோதலில் 42 பேர் பலி
லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 42 பேர் பலியாகினர் என ஐ.நா. தெரிவித்துள்ளது. லிபியாவில் ஆட்சியில் இருந்த சர்வாதிகாரி கடாபி, 2011ம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. பல்வேறு ஆயுதக்மேலும் படிக்க...
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனை போக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது என்று ஓ பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தேனியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மின் தடை ஏற்படும் சமயங்களில் கணினி மயமாக்கல்மேலும் படிக்க...
ஐஎஸ் ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் கைது
ஐ.எஸ். ஆதரவு கருத்துக்களை வெளியிட்ட கோவை வாலிபர்கள் 3 பேர் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கத்துடன் சர்வதேச அளவில் தொடர்பு உள்ளவர்கள்மேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் களைகட்டிய சர்வதேச யோகா விழா
இந்தியாவில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதற்கு முன்னதாகவே சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் மாபெரும் யோகாசன முகாமை இந்திய தூதரகம் நடத்தியது. உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக ஆண்டில் ஒருநாளை சர்வதேச யோகா தினமாகமேலும் படிக்க...
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப சர்வதேசத்துடன் நட்புறவை பேணுவதே எமது நோக்கம் – மைத்திரி
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மானுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி சிறிசேன இதனைத் தெரிவித்தார். ஆசியாவில் கலந்துரையாடல்மேலும் படிக்க...
மைத்திரி- ரணில் பொறுப்புடன் இணைந்து செயற்பட வேண்டும்.- குமார வெல்கம
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்கு இவ்விருவரும் இணைந்தே தீர்வை காண வேண்டும். தேர்தலின் ஊடாக தீர்வு காண முடியும் என்று குறிப்பிடுவது அரசியல் கட்சிகளின் அரசியல் நோக்கமாகவே காணப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் குமாரமேலும் படிக்க...
19வது திருத்தம் பல நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது – மஹிந்த ராஜபக்ஷ
எம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கமற்ற விதத்தில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கிய அரசியலமைப்பின் 19வது திருத்தம் இன்று பல பிரச்சினைகளுக்கு மூல காரணியாக அமைகின்றது. மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருப்பது பாரிய ஜனநாயக உரிமை மீறளாகும் இடம்பெறவுள்ள அனைத்து தேர்லையும் எதிர்க்மேலும் படிக்க...
இலங்கையின் முதலாவது செய்மதி திங்கட்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது
இலங்கையின் முதலாவது செய்மதி எதிர்வரும் திங்கட்கிழமை விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. இலங்கை தொழில்நுட்பவியலாளர்களால் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது செய்மதியாக இது கருதப்படுவதாக ஆதர் சீ கிளார் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அது புவியில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள விண்ணுக்குமேலும் படிக்க...
பயன்பாட்டில் உள்ள பிறப்புச் சான்றிதழ்களில் நூற்றுக்கு 18 வீதமானவை போலியானவை
நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள பிறப்புச் சான்றிதழ்களில் நூற்றுக்கு 18 வீதமானவை போலியானவை என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், எதிர்காலத்தில் இவைபோன்ற போலியான பிறப்புச் சான்றிதழ்கள் வெளியிடப்படுவதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேநேரம், பிறப்புச்மேலும் படிக்க...
ஹிஸ்புல்லாஹ் தீவிரவாத விசாரணைகள் பிரிவில் முன்னிலை..
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் தீவிரவாத விசாரணைகள் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். இன்று காலை 09.45 மணியளவில் அவர் முன்னிலையாகியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதமேலும் படிக்க...
இலங்கை – தஜிகிஸ்தான் ஜனாதிபதிகள் சந்திப்பு
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டிழுப்பும் நடவடிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது தமது நோக்கமாகுமென்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். தஜிகிஸ்தான் ஜனாதிபதி அவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஆசியாவில் கலந்துரையாடல் மற்றும் நம்பகத்தன்மையை கட்டியெழுப்பும்மேலும் படிக்க...
பயங்கரவாத ஆதரவு நாடுகள் மீது கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி வலியுறுத்தல்
பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து, நிதியுதவி செய்து வரும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு, பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார். கிர்கிஸ்தான் தலைநகர்மேலும் படிக்க...
பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஆவா குழுவினருடன் கலந்துரையாட தயார் – சுரேன் ராகவன்
“எந்தவொரு பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி ஆவா குழுவுடன் கலந்துடையாடுவதற்கு நான் தயாராகவுள்ளேன்” என வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். கொக்குவில் புகையிரத நிலைய அதிபர் மீதான தாக்குதலுக்கு பதிலளிக்குமுகமாக ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார். இத்தாக்குதலானது வட மாகாணத்தை மையப்படுத்தி ஆயுதமேலும் படிக்க...