Main Menu

கிரேக்கத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் முயற்சி

கிரேக்கத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள், கடுமையாக போராடி வருகின்றனர்.

கிழக்கு பெலோபொன்னீஸில் உள்ள கொரிந் நகருக்கு அருகே தீ பரவி வருவதால் உள்ளூர்வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்தப் பகுதியில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருவதாக நகரின் மேயர் தெரிவித்துள்ளார். மேலும் இப்பகுதியில் அவசரகால நிலையை அறிவிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேயர் வாசிலிஸ் நானோபேவுலோஸ் கூறுகையில், ‘ஏறக்குறைய அனைத்து வான்வழி தீயணைப்பு உபகரணங்களும் இப்பகுதியில் இயங்குகின்றன என்ற போதிலும், நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை’ என கூறினார்.

தீயிணை கட்டுப்படுத்துவதற்கு 260க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இதில் 10 ஹெலிகொப்டர்கள் மற்றும் 10 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எனினும், குறித்த காட்டுத்தீயினால் எவருக்கும் காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் இதுவரை பாதிவாகவில்லை.

பகிரவும்...