Main Menu

காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்

காசா பகுதியில் இன்று புதன்கிழமை ஒரே இரவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்று பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலிய போர் விமானங்கள் வடக்குப் பகுதியில் உள்ள பீட் லஹியாவில் உள்ள ஒரு இடத்தில் ஏவுகணைகளை வீசின என்றும் மத்திய காசாவில் உள்ள நகரமான டெய்ர் அல்-பாலாவிலும், தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸின் சில பகுதிகளையும் அவர்கள் குறிவைத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவங்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

காசா பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸ், எங்கள் மக்கள் அல்லது எதிர்ப்பு தளங்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் நேரடியாக பதில் கொடுக்கும் என இஸ்ரேலை எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...