Main Menu

அலுவல் மொழிகள் சட்டம் திருத்தப்படாது : மத்திய அரசு

ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் வகையில் அலுவல் மொழிகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், ஹிந்தி, ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை அலுவல் மொழிகளாக மாற்றும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என தெரிவித்துள்ளது.

மேலும், ஹிந்தி அல்லாத மற்ற மொழிகள் பேசும் மக்களின் வசதிக்காக அரசு அலுவலகங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தவிர்த்து பிராந்திய மொழியிலும், தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

பகிரவும்...