Main Menu

கொரோனா தொற்று அதிகரிப்பு – 81 பாடசாலைகளை மூடுகிறது பிரான்ஸ்

கடந்த வார ஆரம்பத்தில் 28 பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிரான்சில் மொத்தம் 81 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் 2 ஆயிரத்து 100 தனிப்பட்ட வகுப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீன்-மைக்கல் பிளாங்கர் தெரிவித்தார்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது மாணவர்களிடையே சுமார் 1,200 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஓகஸ்ட் முதல் பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றன.

83 நேர்மறை பரிசோதனைகளுக்குப் பிறகு இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகளை ரென்ஸ் பல்கலைக்கழகம் இந்த வாரம் நிறுத்தியது.

சனிக்கிழமையன்று, நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இதனை அடுத்து போர்டியாக்ஸ் மற்றும் மார்சேயில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...