ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு
ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் (Operation Midnight Hammer) நடவடிக்கையின் மூலம் ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்ரூத் சோஷியல்” தளத்தில் இதனை அறிவித்துள்ளார்.
தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீட்பது நீண்ட மற்றும் சிக்கலான செயன்முறையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், ஃபோர்டோ, நடன்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், CNN உள்ளிட்ட சில ஊடகங்கள் அமெரிக்க விமானிகளின் செயற்பாடுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கத் தவறுகின்றன எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
