Main Menu

கருணாநிதி எழுதிய 4041 கடிதங்கள் 54 தொகுதிகள் கொண்ட புத்தகமாக தயாரிப்பு- முதலமைச்சர் வெளியிடுகிறார்

விருதுநகரில் வருகிற 15-ந் தேதி மாலை நடைபெறும் தி.மு.க. முப்பெரும் விழாவில் கலைஞர் கடிதங்கள் தொகுப்பு நூல்களாக வெளியிடப்படுகின்றன. இந்நூல்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரை முருகன் பெற்றுக்கொள்கிறார். அது பற்றிய விவரம் வருமாறு:- 1968 தொடங்கி 2018 வரையில் கலைஞர், கட்சி தொண்டர்களுக்கு எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்களை சீதை பதிப்பகத்தில் உரிமையாளர் கவுரா ராஜசேகரன் புதுப்பித்து உள்ளார். 21 ஆயிரத்து 510 பக்கங்களில் கலைஞர் எழுதிய அனைத்து கடிதங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. 54 தொகுதிகளாக அவை வெளிவந்துள்ளன.

கலைஞர் தன் வாழ்நாளில் எழுதி இருக்கும் இன்னும் பல்லாயிரம் பக்கங்களுக்கு நடுவே இவை ஒரு பகுதிதான். அத்தனையும் செய்திகள். அன்றாடம் அரசியல் பற்றிய விமர்சனங்கள், கட்சிக்குள்ளும், வெளியிலும் நடைபெற்ற செய்திகள் பற்றிய விளக்கங்கள். சுருக்கமாக சொன்னால் அந்நூல்கள் கலைஞரின் அரை நூற்றாண்டு ஆவணங்கள். வரும் 15-ந் தேதி அண்ணாவின் பிறந்தநாள் அன்று விருதுநகரில் நடைபெற இருக்கும் தி.மு.க. நடத்தும் முப்பெரும் விழாவில் இந்நூல்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொள்கிறார்.

பகிரவும்...