Main Menu

கருக் கலைப்புக்கான சட்டமூலம் : புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு!

கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போதைய விதிகளின் படி பெண்கள் சாதரணமாக 12 வாரங்களுக்குள் கருகலைப்பு செய்து கொள்ள மருத்துவரின் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருகலைப்பு செய்து கொள்வதற்கான காலவரம்பு குறித்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பான புதிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...