Main Menu

கடன் தவணை உரிமைக் காலத்தை 2 ஆண்டுகள் வரை நீடிக்க முடியும்!

கடன் தவணை உரிமைக் காலத்தை 2 ஆண்டுகள்வரை நீடிக்க முடியும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வங்கிக் கடனை திரும்ப செலுத்துவதற்கான மாதத் தவணையின் வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை இரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே மத்திய அரசு மேற்படி அறிவித்துள்ளது.

இதன்போது கடன் தவணை உரிமை காலத்தை 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க செய்ய முடியும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து வட்டிக்கு வட்டி விதிப்பது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க சிறிது காலம் தேவைப்படுகிறது எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பலர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வங்கிகள், நிதிநிறுவனங்களில் பெற்றுக்கொண்ட கட்டணத்திற்கான மாதாந்திர தவணையை இப்போதைக்கு செலுத்த தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...