Main Menu

கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர்வதை அரசாங்கம் அனுமதிக்கப் போகின்றதா? – ஹர்ஷ டி சில்வா

கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தொடர்வதை தற்போதைய அரசாங்கம் அனுமதிக்கப்போகின்றதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.

2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான யுகத்தை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் கடந்த 10 ஆம் திகதி ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள டுவிட்டரில் பதிவை பகிர்ந்தே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

“கறுப்பு நிற வேனில் ஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டு, அவரது செய்தி மூலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பற்றிய தகவல்களை தெரிவிக்கும்படி சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் வீதியோரத்தில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களே, மீண்டும் கடத்தல் சம்பவங்கள் தொடர்வதை நீங்கள் அனுமதிக்கப்போகின்றீர்களா” என்ற கேள்வியுடன் குறித்த பதிவை பகிர்ந்துள்ளார்.

இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...