Main Menu

ஐ.நா.வின் 42வது கூட்டத்தொடர் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42வது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது.

ஜெனீவாவில் ஆரம்பிக்கும் இந்த கூட்டத்தொடர், எதிர்வரும் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இன்று ஆரம்பமாகின்ற  கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் குறித்து பிரதான நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படவில்லை.

எனினும் கூட்டதொடரின் பக்க கலந்துரையாடல்களின்போது, இலங்கை குறித்து சர்தேச மன்னிப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட ஐ.நா.வில் நிரந்தர சிறப்பு அந்தஸ்துள்ள மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

பொறுப்புக்கூறல் கடப்பாடுடைய சவேந்திர சில்வா இலங்கை இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள கூடிய விடயமல்ல என ஐ.நா.நிபுணர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

எனவே சவேந்திர சில்வா விவகாரம் மற்றும் கால அவகாசத்தின் அடிப்படையிலான முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...