Main Menu

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு கூட்டத்திற்கு 60 நாடுகள் ஆதரவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் வருகிற 24-ந்தேதி சிறப்பு கூட்டத்தை கூட்டுகிறது.

மனித உரிமை ஆணையம்ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறத் தொடங்கிய நிலையில் தலிபான்கள் நாட்டை பிடிக்க ஆரம்பித்தனர். காபூல் நகரை பிடித்த அவர்கள், ஆட்சி அதிகாரத்தையும் பிடித்துள்ளனர். தலிபான் அமைப்பை பெரும்பாலான நாடுகள் பயங்கரவாத அமைப்பு என அறிவித்துள்ளது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் பறிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் வருகிற 24-ந்தேதி சிறப்பு கூட்டத்தை கூட்டுகிறது. இதற்கு பிரான்ஸ், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 60 நாடுகள்  ஆதரவு தெரிவித்துள்ளன.

பகிரவும்...