Main Menu

ஐ.நா. பாதுகாப்பு சபையை எச்சரித்தது வடகொரியா!

வடகொரியாவின் மனித உரிமை நிலைமை தொடர்பான எந்தவொரு கலந்துரையாடலும் கடுமையான ஆத்திரமூட்டும் விடயம் என வடகொரியா தெரிவித்துள்ளது.

இதற்கு பியோங்யொங் கடுமையாக பதிலளிக்கும் என வட கொரியா நேற்று (புதன்கிழமை) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை எச்சரித்தது.

வட கொரியாவின் ஐக்கிய நாடுகளுக்கான தூதுவர் கிம் சொங் எழுதிய கடிதத்தில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் 15 பேர் கொண்ட சபையின் பல உறுப்பினர்கள் வட கொரியாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து இம்மாதம் ஒரு கூட்டத்தை ஒழுங்குபடுத்த திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.

அத்தகைய சந்திப்பு வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவின் விரோதக் கொள்கையுடன் ஒத்துப்போகும் செயலாகும் என கிம் சொங் கடிதத்தில் எழுதியுள்ளார்.

இது கொரிய தீபகற்பத்தில் பதற்றங்களைக் குறைப்பதற்கும் அணுசக்தி பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் உதவுவதை குறைமதிப்பிற்கு உள்ளாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...