Main Menu

துரிதமாக உயரும் கடல் மட்டம் – சர்வதேச நகரங்கள் மூழ்கும் அபாயம்!

முன்னர் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளை விட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு கிறீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா கண்டத்தின் பல பகுதிகள் விரைவாக வௌிப்பட்டு வருவதுதான் காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.

2100 ஆம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இதனைவிட இரண்டு மடங்கு உயருமென தற்போது ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல் மட்டம் உயர்வதன் காரணமாக 1.79 மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலம் பறிபோகும். அதாவது லிபியா நாட்டின் நிலப்பரப்பு அளவிலான பகுதி நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.

இதன் விளைவாக லட்சகணக்கானோர் தங்கள் வாழ்விடங்களை இழப்பார்கள் என்றும் லண்டன், நியூயார்க், சீனாவின் ஷாங்காய் போன்ற முக்கிய நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும். அத்துடன் மக்கள் வசிக்க முடியாத நாடாக பங்களாதேஷ் மாறும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...