Main Menu

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் : அறுதி பெரும் பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பா.ஜ.க

ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் ஆளும் பா.ஜ.கா ஆட்சியமைக்கவுள்ளது.

உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் நேற்றைய (வியாழக்கிழமை) தினம்  எண்ணப்பட்டன.

2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலுக்கான முன்னோட்டமாகக் கருதப்பட்டதால் இந்தத் தோ்தல் முடிவுகள் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தன.

தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்பு முடிவுகளின்படி உத்தர பிரதேசம்,  உத்தரகண்ட்,  மணிப்பூா் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கிறது.

கோவாவில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி நிலவும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அந்த மாநிலத்திலும் பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இதனையடுத்து  உத்தரகண்ட் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...