Main Menu

ஏமன்: சந்தை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் பலி

ஏமன் நாட்டின் சாடா மாகாணத்தில் உள்ள சந்தை பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு முதல்  சண்டை நடந்து வருகிறது.
இந்த உள்நாட்டுப் போரில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஈரான் ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ஏமன் அரசு படைகளுக்கு ஆதரவாக சவுதி தலைமையினான கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்திவருகிறது. இந்த சண்டையால் அங்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், சவுதி நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள ஏமனின் சாடா மாகாணத்தின் மனப்ஹி மாவட்டத்தில் உள்ள சந்தை பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 4 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அரசுப் படைகளோ அல்லது கிளர்ச்சியாளர்களோ பொறுப்பேற்கவில்லை. 
இதற்கிடையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பகிரவும்...