Main Menu

எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் தேவை – அங்கலா மேர்க்கல்

ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் தேவை என ஜேர்மன் அதிபர் அங்கலா மேர்க்கல்லும் வலியறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறியிருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், யார் வருகிறார்கள், யார் ஷெங்கன் பகுதியை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்.

130 பேரைக் கொன்ற பாரிஸ் பயங்கரவாத தாக்குதலின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நினைவு கூரப்படுகின்றது.

இருப்பினும், பிரான்ஸில் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் இடம் பெற்றுவருகின்றது.

குறிப்பாக தலைநகரின் வடக்கில் சமீபத்திய வாரங்களில் ஒரு ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை மற்றும் தேவாலயத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

அத்தோடு ஒஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த வாரம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர முயன்ற ஒரு நபர் நான்கு பேரை சுட்டுக் கொன்றான்.

நைஸ் மற்றும் வியன்னா தாக்குதல்களில் ஷெங்கன் விதிகளின் காரணமாக நாடுகளுக்கு இடையில் சுதந்திரமாக நகர்ந்த மக்கள் சம்பந்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் குறித்த முடிவுகளுக்கு வந்துள்ளன.

பகிரவும்...