Main Menu

ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் – பிரான்ஸ்

பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரான்சில் இரண்டு மற்றும் வியன்னாவில் ஒன்று என மூன்று பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

ஜேர்மனி, ஒஸ்திரியா, நெதர்லாந்து தலைவர்களுடன் பயங்கரவாத எதிர்ப்பு மூலோபாயம் குறித்த மாநாட்டிற்கு பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஐரோப்பாவின் விசா இல்லாத ஷெங்கன் பகுதியின் வெளிப்புற எல்லைகள் எவ்வாறு மெருகூட்டப்படுகின்றன என்பதற்கான சீர்திருத்தத்தை விரும்புவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி கூறினார்.

வெளி எல்லையில் அல்லது உறுப்பு மாநிலத்தில் உள்ள அனைத்து பலவீனங்களும் ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பாதுகாப்பு சிக்கல் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பகிரவும்...