Main Menu

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது – வாசுதேவ

எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் எந்த நாட்டு எதிர்க்கட்சியும் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படவில்லை. அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து சவால்களை எதிர்க்கொள்கிறார்கள்.

ஆனால் எமது நாட்டின் எதிர்க்கட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக காணப்படுகின்றது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தியுள்ளது. இச்சந்தர்ப்பத்தை எதிர்தரப்பினர் தங்களின் அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

அரசியல் இஅரசியலமைப்பு ரீதியாகவும் நெருக்கடியை ஏற்படுத்தி மக்களை அரசாங்கத்துக்கு எதிராக தூண்டிவிடும் நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு எதிர்தரப்பினர் வெறுக்கத்தக்க அரசியல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கின்றார்கள்.

கொரோனா வைரஸ் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் வழமைக்கு திரும்பும்“ எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...