Main Menu

எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு 25 இலட்சம் இழப்பீடு!

விருதுநகரில் எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை  உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த பெண்ணின் பெயரில் 10 இலட்சம் ரூபாயும், இரு குழந்தைகளின் பெயரில் 15 இலட்சம் ரூபாயும் வங்கியில் வைப்பிலிட வேண்டுமென உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 450 சதுர அடிக்கு குறையாத இரண்டு அறைகளை கொண்ட வீடொன்றையும் நிர்மாணித்து கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எச்.ஐ.வி. தொற்று இரத்தம் செலுத்தப்பட்டது.

இதையடுத்து அவர் மேலதிக சிகிச்சைக்காக மதுரை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த பெண் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளது உறுதியானது.

இதையடுத்து அந்த பெண்ணின் கருவில் இருந்த குழந்தைக்கு குறித்த நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...