Main Menu

ஊரடங்கு தொடர்பான புதிய அறிவிப்பு வெளியானது

இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இரவு 12 மணி முதல் காலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் தளர்த்தப்படவுள்ளதாக அந்தப் பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு தளர்வுகளுடனும் கட்டம் கட்டமாகவும் அமுல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படுகிறது.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் அதிகரித்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் கட்டம் கட்டமாக மற்றும் தளர்வுகளுடனான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த மே மாதம் வரையில் நாட்டில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அண்மைக்காலமாக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்துள்ள போதிலும் இந்த தொற்று மக்கள் மத்தியில் பரவுகின்றமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...