Main Menu

உ.பி. மந்திரிசபை விஸ்தரிப்பு – 23 மந்திரிகள் பதவி ஏற்றனர்

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மந்திரிசபை விஸ்தரிப்பில் 23 கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. தனது மந்திரிசபையை விஸ்தரிக்க யோகி ஆதித்யநாத் முடிவு செய்தார். அதற்கு வசதியாக சமீபத்தில் 5 மந்திரிகள் பதவி விலகினர்.

இந்நிலையில், நேற்று மந்திரிசபை விஸ்தரிப்பு நடைபெற்றது. 19 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். இணை மந்திரிகளான 4 பேர், கேபினட் மந்திரிகளாக பதவி ஏற்றனர். அனைவருக்கும் கவர்னர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

புதிய மந்திரிகளுக்கு கவர்னரும், முதல்-மந்திரியும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். சில மந்திரிகள், அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

நேற்று பதவி ஏற்றவர்களில் தலா 6 பேர் கேபினட் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய இணை மந்திரிகள் ஆவர். 11 பேர் இணை மந்திரிகள். பல்வேறு சாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன், உத்தர பிரதேச மந்திரிசபை பலம் 53 ஆக உயர்ந்துள்ளது.

பகிரவும்...