Main Menu

உலகளவில் கொரோனா வைரஸிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எவ்வாறாயினும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேசமயம் அந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்தே செல்கிறது.

அதற்கமைய உலகளவில் இந்த வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்து 41 ஆயிரத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 93 இலட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 38 இலட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதேநேரம் இந்த வைரஸ் காரணமாக இதுவரை 4 இலட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதேநேரம் இந்த வைரஸ் தொற்று காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் தொடர்ந்தும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்க இந்த வைரஸ் காரணமாக இதுவரை 2,424,168 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம், 123,473 பேர் உயிரிழந்துள்ளனர்.

இருந்தபோதிலும் அமெரிக்காவில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை 1,020,381 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அமெரிக்காவை அடுத்து கொரோனாவால்  அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேஸில், ரஸ்யா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...