Main Menu

உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப் படுவர்: ஐ.நா. எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடி காரணமாக, உலகம் முழுவதும் 4.7 கோடி பெண்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இந்த நிலையிலிருந்து கொவிட்-19 நெருக்கடிக்கு முன்பிருந்த நிலைக்கு முன்னேற்றமடைய 2030ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பெண்கள் மேம்பாட்டு நலப் பிரிவு (யுஎன்டிபி) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பெண்களிடையான வறுமை வீதம், 2019ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டுக்குள் 2.7 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொவிட்-19 நோய்த்தொற்று பரவல் நெருக்கடி காரணமாக பெண்களின் வறுமை வீதம் 9.1 சதவீதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்ட்டுள்ளது.

கொவிட்-19 நெருக்கடியின் விளைவுகளால் 2021ஆம் ஆண்டளவில் உலகம் முழுவதும் கூடுதலாக 9.6 கோடி பேர் மிக வறுமையான நிலைக்குத் தள்ளப்பபடுவர். அவர்களில் 4.7 கோடி பேர் பெண்கள் மற்றும் சிறுமியாக இருப்பார்கள். இதன் மூலம், உலகில் வறுமையில் வாடும் பெண்களின் எண்ணிக்கை 43.5 கோடியாக அதிகரிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...