Main Menu

உணவகங்கள்- முடி திருத்துமிடங்களை மீண்டும் திறக்க போலந்து திட்டம்!

போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று வீதம் குறைந்து வருவதால், உணவகங்களையும் முடி திருத்துமிடங்களையும் மீண்டும் திறக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை எளிதாக்கும் ஒரு அங்கமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மேட்டூஸ் மொராவிஸ்கி தெரிவித்தார்.

இதன்படி, எதிர்வரும் மே 18ஆம் திகதி உணவகங்களும் முடி திருத்துமிடங்களும் திறக்கப்படுமென அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன், ஆரம்ப பாடசாலையில் சிறுவர்களுக்கு முதல் மூன்று வருட பகல் நேரப் பராமரிப்பினை வழங்குவதற்காக பாடசாலைகள் பகுதியளவில் மீள திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

போலந்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 17,062பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 847பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிரவும்...