Main Menu

உக்ரைன்- ரஷ்யாவிற்கு இடையிலான பேச்சு வார்த்தை ஆரம்பம்

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை பெலாரஷிய எல்லையில் தொடங்கியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக உக்ரைன் ஜனாதிபதியின் அலுவலகம், கலந்துரையாடலுக்கான உக்ரைனின் இலக்கு உடனடியான போர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்ய படைகளையும் திரும்பப் பெறுவது எனக் கூறியது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கிடையிலான பேச்சுவார்த்தை இன்னும் இரண்டு மணி நேரத்தில் தொடங்கும் என அறிய முடிகின்றது.

இரு தரப்பு பிரதிநிதிகள் யார் என தெரியாத நிலையில், அவர்கள் மிகவும் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் என விபரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் 1986இல் பேரழிவின் போது கைவிடப்பட்ட செர்னோபில் அணு உலைக்கு அருகிலுள்ள விலக்கு மண்டலத்தின் மையத்தில் உள்ள பேய் நகரம் என்று அழைக்கப்படும் பிரிபியாட் என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

முன்னதாக ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்கான இடம் தயாராகிவிட்டதாக பெலாரஷ்ய அரசு நடத்தும் செய்தி நிறுவனம் பெல்டா தெரிவித்திருந்தது.

இரு தரப்பிலிருந்தும் பிரதிநிதிகள் இடத்திற்கு வந்தவுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனடோலி கிளாஸை மேற்கோள் காட்டி பெல்டா செய்தி வெளியிட்டிருந்தது.

பகிரவும்...