Main Menu

உக்ரேனின் ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

உக்ரேனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனினும், 42 வயதான வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நிலையான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலினா, ஜூன் மாதத்தில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு பல வாரங்கள் மருத்துவமனையில் கழித்தார்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் உக்ரேன் வார இறுதிகளில் ஒரு முடக்கநிலையை அறிமுகப்படுத்தக்கூடும் என்று ஜனாதிபதி திங்களன்று கூறிய சிறிது நேரத்திலேயே செய்தி வந்தது,

இந்தநிலையில் இதுகுறித்து ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத அதிர்ஷ்டசாலிகள் யாரும் இல்லை.

அனைத்து தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளும் இருந்தபோதிலும், எனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நன்றாக உள்ளேன், அதிக அளவிலான ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொண்டுள்ளேன்.

என்னை தனிமைப்படுத்துவதாக உறுதியளிக்கிறேன், இருப்பினும் தொடர்ந்து எனது பணிகளை செய்வேன். பெரும்பாலான மக்கள் தொற்றை வென்றது போல நானும் வென்று வருவேன் என கூறியுள்ளார்.

பகிரவும்...