Main Menu

இஸ்ரேல் தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாஹூ வெற்றி

இஸ்ரேலில் நடைபெற்று முடிந்த தேர்தலில் மீண்டும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வெற்றி பெற்றுள்ளார்.

4ஆவது முறையாக நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நடந்த தேர்தலில் பிரதமர் நெதன்யாஹூ மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.

இதுகுறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள நெதன்யாஹூ, தேர்தலில் அமோக வெற்றி பெறச் செய்த இஸ்ரேல் மக்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

மேலும் கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் பேசியதாகவம் அவர்களிடம் பொறுப்பான நடவடிக்கையை எடுத்து ஒரு நிலையான அரசாங்கத்தை அமைப்போம் என கூறியதாகவும் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு, இஸ்ரேலின் அனைத்து குடிமக்களையும் கவனித்துக்கொள்ளும் ஒரு அரசாங்கத்தை உருவாக்குவோம் என தெரிவித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஐந்தாவது முறையாகவும் தேர்தல்  நடைபெறாது தடுத்து, இஸ்ரேலுக்கு ஒரு நல்ல மற்றும் நிலையான அரசாங்கத்தை நிறுவுங்கள் என கூறியதாகவும் நெதன்யாஹூ பதிவிட்டுள்ளார்.

அதிகமான தொகுதிகளில் நெதன்யாஹூவின் லிக்குட் கட்சி வெற்றிபெறாத நிலையில், அங்கு கூட்டணி ஆட்சி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார சீர்கேடு, கொரோனா பரவலைக் கையாள்வதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட காரணங்களால் இஸ்ரேல் பிரதமருக்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டன.

அதன் விளைவாக இஸ்ரேலில் கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை தேர்தல் நடைபெற்றது.

அதேநேரம் 5ஆவது முறையாக தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...