Main Menu

இளைஞரின் சிந்தனையில் உருவாகிய உந்த்ராடேங்க்

தரமான சாலைகள் கொண்ட ரஷ்யாவில், பயணிக்க ஒருவர் காரில் பீரங்கிகளில் (tanker) உள்ளது போன்ற சக்கர அமைப்பை ஏற்படுத்தியிருப்பது பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

ரஷ்யாவை சேர்ந்த கொன்ஸ்டானின் ஜரூட்ஸ்கை (Konstantin Zarutskiy) என்ற இளைஞர், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பிற வாகனங்கள் மீதான தனது ஈடுபாட்டை வளர்க்க, யூடியூப்பில் தனி சேனல் நடத்தி வருகிறார்.

அண்மையில் தனது காரில், பீரங்கிகளில் உள்ளது போன்ற சக்கர அமைப்பை ஏற்படுத்திய அவர், அதற்கு உந்த்ராடேங்க் (‘Untratank’ ) என்று பெயரிட்டதோடு, தனது கார் பிற கார்களை நசுக்கும் அளவுக்கும் திறமை கொண்டது என கூறி வீடியோ வெளியிட்டார். இதனை யூடியூப்பில் பார்த்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

பகிரவும்...