வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக குணால் ஷா நியமனம்
வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக , இந்தியாவில் உள்ள பிரபலமானஃபின்டெக் நிறுவனமான கிரெட் நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா ,நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்ற நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது தகவல்களை தந்த வண்ணமே உள்ளது.
மேலும்,வட்ஸ்அப்பிற்கு போட்டியாக பல செயலிகள் அறிமுகமான நிலையில், எந்த செயலியும் பெரிதாக முன்னேற்றம் காணவில்லை.
இந்நிலையில்,ஒரு சமூக ஊடக செயலிக்கு இந்தியர் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது, இந்திய மக்கள்
மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
