Main Menu

அதிநவீன அம்சங்களுடன் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 22 சீரிஸ்

சாம்சங் நிறுவனத்தின்சாம்சங் கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போன்கள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 சீரிஸ்சாம்சங் கேலக்ஸி எஸ்22-ல் 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இது 48–120Hz ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்குகிறது. இந்த டிஸ்பிளேவை பாதுகாக்க கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பேனல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது 4nm octa-core Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர் கொண்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்ஸில் இயங்குகிறது.
கேமராவை பொறுத்தவரை 3 பின்புற கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் f/1.8 வைட் ஆங்கில் லென்ஸ், ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலிஷேசன் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா ஒயிட் ஷூட்ட, 10 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ ஷூட்டர் வழங்கப்பட்டுள்ளது. செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு f/2.2 லென்ஸ் கொண்ட 10 மெகாபிக்ஸல் செல்பி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த போனில் 5ஜி, 4ஜி எல்.டி.இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டைப் சி யூஎஸ்பி போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.

சென்சார் போர்டில் ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியன் லைட், பேரோமீட்டர், கைரோ, ஹால், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், ஐபி68 தூசு மற்றும் வாட்டர் ரெசிஸ்டெண்ட் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த போனில் 3,700mAh பேட்டரி, 25W ஒயர் சார்ஜர், 15W ஒயர்லெஸ் சார்ஜிங் தரப்பட்டுள்ளது.
இதன் விலையை பொறுத்தவரை 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.72,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22+, கேலக்ஸி எஸ்22 கொண்டுள்ள அதே அம்சங்களை கொண்டுள்ளது. கூடுதலாக இந்த போன் 6.6 இன்ச் ஃபுல் ஹெச்டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் Wi-Fi 6E மற்றும் அல்ட்ரா வைட்பேண்ட் சப்போர்ட்டுடன் வருகிறது. இதில் 4,500mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. 45W ஒயர் சார்ஜிங், 15W ஒயர்லெஸ் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒயர்லெஸ் பவர் ஷேர் சப்போர்ட்டையும் வழங்குகிறது.
இதன் 8ஜிபி ரேம்+128ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.84,999-ஆகவும், 8ஜிபி ரேம்+ 256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.88,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா போனில் 6.8 இன்ச் Edge QHD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே தரப்பட்டுள்ளது. இதன் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் 1–120Hz-ஆகவும், டச் சாம்பிளிங் ரேட் 240Hz-ஆகவும் இருக்கிறது. இது Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர், ஆண்ட்ராய்டு 12, One UI 4.1-ல் இயங்குகிறது.
கேமராவை பொறுத்தவரை இதில் பின்பக்கம் 4 கேமரா செட் அப் வழங்கப்பட்டுள்ளது. இது f/1.8 லென்சுடன் 108 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 12 மெகாபிக்ஸச்ல் அல்ட்ரா வைட் ஷூட்டர், 3x ஆப்டிக்கல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்ஸல் டெலி போட்டோ ஷூட்டர் மற்றும் 10x ஆப்டிக்கல் ஜூம் கொண்ட 10 மெகாபிக்சல் டெலிபோட்டோ ஷூட்டர் லென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
செல்பி மற்றும் வீடியோ கால்களுக்கு 40 மெகாபிக்ஸல் செல்பி கேமரா f/2.2 லென்சுடன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த போனில் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6இ, 5.2 வெர்ஷன் ப்ளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், சி டைப் யூஎஸ்பி போர்ட், ஆன் போர்ட் சென்சாரில் ஆக்ஸலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், பேரோ மீட்டர், கைரோ, ஹால், மேக்னெட்டோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார், இன் டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார், எஸ் பென் ஸ்டைலெஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
5000mAh பேட்டரி சப்போர்ட் கொண்ட இந்த போனில் 45W ஒயர் சார்ஜிங்கும், 15W ஒயர்லெஸ் சார்ஜிங்கும் வழங்கப்பட்டுள்ளது. 
இந்த போனில் 12ஜிபி ரேம்+256 ஜிபி மெமரி வேரியண்டின் விலை ரூ.1,09,999-ஆகவும், 12ஜிபி + 512ஜிபி வேரியண்டின் விலை ரூ.1,18,999-ஆகவும், நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பகிரவும்...