Main Menu

ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம்

இத்தாலி நாட்டு ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்து இருக்கிறது.

இத்தாலி நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் ஆப்பிள் நிறுவனத்திற்கு 10 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.879008769) அபராதம் விதித்து இருக்கிறது. 
புதிய ஐபோன்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கியது பற்றி தவறான தகவல்களை விளம்பரப்படுத்திய காரணத்திற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. 
ஐபோன் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி குறிப்பிட்ட காலநிலைகளில் மட்டும் வேலை செய்யும் என்பதை ஆப்பிள் தெளிவாக விவரிக்கவில்லை என இத்தாலி நாட்டின் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.  

 ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ்எஸ், ஐபோன் எக்ஸ்எஸ் பிளஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கான விளம்பரங்களில் ஆப்பிள் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி பற்றி தெளிவாக விவரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி இருப்பதாக தெரிவித்து, திரவங்களால் சேதமடைந்தால் வாரண்டி பொருந்தாது என பொறுப்புத்துறப்பில் தெரிவித்து இருப்பது வாடிக்கையாளர்களை ஏமாற்றும் செயல் என இத்தாலி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.

பகிரவும்...