Main Menu

விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை வெளியிட்டது, கணினி தரவுகளை ஹேக் செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரை நாடு கடத்த கோரி அமெரிக்க தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், அதனை ஏற்று அது தொடர்பான உத்தரவில் கையெழுத்து இட்டுள்ளதாகவும் இங்கிலாந்து உள்துறை செயலர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...