Main Menu

இலங்கையில் தயாரிக்கப் பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம்!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் குழு நீண்டகாலமாக மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரித்துள்ள, வைரஸ்களை அழிக்கக் கூடிய இந்த முகக் கவசம், நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை பயன்பாட்டில் உள்ள சகல முகக்கவசங்களையும் விட உயர்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள இந்த முகக்கவசம் மூன்று அடுக்குகளைக் கொண்டதாக ஆய்வுகளை நடத்திய பேராதனை பல்கலைக்கழகத்தின் இரசாயன விஞ்ஞானம் தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் காமினி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, முதலாவது அடுக்கில் உமிழ்நீர் போன்ற திரவங்கள் உடனடியாக நீக்கப்படும் என்பதுடன், இரண்டாவது அடுக்கில் உள்ள விசேட இரசாயனம் வைரஸை அழிப்பதுடன் மூன்றாவது அடுக்கில் உமிழ்நீர் ஆவியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த முகக் கவசத்தைக் கழுவி, தொடர்ந்து 25 தடவைகள் பயன்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பகிரவும்...